இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் : "Thug Life" படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது.
பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. அதில், கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், மணி ரத்னம் இயக்கத்தில், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இசை வெளியீட்டு விழா, சென்னையில் மே 16ம் தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எல்லையில் நிலவி வரும் போர் பதற்ற சூழல் காரணமாக இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



